2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்கத் தீர்மானம்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 07 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

முஸ்லிம் அரசியல் தலைமைகளை ஒரணியில் திரட்டி முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு கிழக்கு முஸ்லிம் பேரவை தீர்மானித்துள்ளதாக அப்பேரவையின்  ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ஷிபான் தெரிவித்தார்.

இப்பேரவையின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம், அதன் கல்முனை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) இரவு நடைபெற்றபோதே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் கருத்தொருமிப்புக்கு வரவேண்டிய அவசியம் தொடர்பிலும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மு.கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத், மு.கா. செயலாளர் நாயகம் ஹசன் அலி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரி;ஷாட் பதியுதீன், தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிழக்கு மாகாணப் பொறுப்பாளரும் இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இதை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, தேசிய சூறாசபை ஆகியன வலியுறுத்த வேண்டும் என்று அவற்றிடம் கோரிக்கை விடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .