Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 நவம்பர் 11 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சி.அன்சார்
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்கும் அரசை கண்டித்து ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமை (11) சம்மாந்துறையில் இடம்பெற்றது.
ஜூம்மாத் தொழுகையினை தொடர்ந்து சம்மாந்துறை அல்- மர்ஜான மகளிர் கல்லூரி முன்பாக ஆரம்பமாகி ஹிஜ்ரா சந்தியில் சுமார் ஒரு மணிநேரம் வரை இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினரின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு கிளைகளின் அங்கத்தவர்கள், பிரதிநிதிகள் பெண்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட பெருந்திரளான முஸ்லிம் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் அப்துல் ராசீக், 'ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை கிடைக்கப்பெறுவதாக இருந்தால் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு சில நிபந்தனைகளை விதித்திருக்கின்றது. இதன் பிரகாரம் முஸ்லிம் தனியார் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் கூறி முஸ்லிம் சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைக்காக எமது உரிமைகளை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். கடந்த 2009ஆம் ஆண்டு இது தொடர்பிலான குழுவொன்று அமைக்கப்பட்டு அது தொடர்பிலான பரிசீலனை நடைபெற்று வருகின்ற நிலையில் இவ்வாறான ஒரு முடிவினை அரசாங்கம் வெளியிட்டுருக்கின்றமை முஸ்லிம்களை அவமதிக்கும் செயலாகும்,
முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஒரு திருத்தம் கொள்ளப்பட வேண்டுமாயின் அதனை முஸ்லிம்களாகிய நாங்களே முடிவெடுக்க வேண்டுமே தவிர ஒரு போதும் அரசாங்கப் பிரதிநிதிகளோ அல்லது ஐரோப்பிய ஒன்றியமோ முடிவெடுக்க முடியாது' எனத் தெரிவித்தனர்.
10 minute ago
14 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
20 minute ago