Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 05 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா, வி.சுகிர்தகுமார்
அம்பாறை, பொத்துவில் பிரதேசத்திலும் திருகோணமலை, மஹதிவுல்வெவ பகுதியிலும் இன்று (05) அதிகாலை இடம்பெற்ற வெவ்வேறு யானைத் தாக்குதல்களில் ஒருவர் பலியாகியுள்ளார் என்பதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.
பொத்துவில், அல்-ஹூதா கிராமத்துக்குள் புகுந்த யானையொன்று தாக்கியதில் முகம்மது இஸ்மாயில் சலீம் (வயது 45) என்பவர் பலியாகியுள்ளாரென, பொத்ததுவில் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இச்சம்பவத்தில் காமால்டீன் பரீனா (42 வயது), எம். பர்ஸான் (25 வயது) ஆகியோரும் காயமடைந்துள்ளனரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அல்-ஹூதா கிராமத்துக்குள் நேற்றுக் காலை 5 மணியளவில் புகுந்த காட்டு யானை, பொத்துவில் பிராதான வீதி, மன்முனை, கொடிமரப்பள்ளி ஆகியவற்றை ஊடறுத்து, முகுதுமகா விகாரைப் பகுதிக்குள்ளும் நுழைந்துள்ளது.
யானை, மதில் சுவர்கள் சிலவற்றையும் உடைத்து சேதப்படுத்திய நிலையில், பிரதேச மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இதனையடுத்து, பொலிஸார், வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் சம்பவ இடத்துக்கு விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago