2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு

Menaka Mookandi   / 2016 ஜனவரி 13 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்,பைஷல் இஸ்மாயில்

அட்டாளைச்சேனை, ஒலுவில், அஷ்ரப் நகர் பிரதேசத்தில் அமைந்துள்ள குப்பைகள் சேகரிக்கும் இடத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகள், காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் முற்றாக சேதமாக்கப்பட்டு வருகின்றது.

யானைத் தடுப்பு மின்சார வேலிக்கு மின்சாரத்தினை வழங்கி வந்த மின்மாற்றி, மின்னல் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கடந்த ஒரு வருடமாக செயலிழந்து காணப்படுகின்றது.

இதனால், காட்டு யானைகள் இலகுவாக மின்சார வேலியை உடைத்துக்கொண்டு குப்பைகள் சேகரிக்குமிடத்தை நோக்கி நாளாந்தம் படையெடுப்பதுடன் மக்கள் குடியிருப்பு பிரதேசங்களுக்கும் சென்று சேதங்களை விளைவித்து வருகின்றதாகவும் இது விடயமாக சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் எடுத்துக்கூறியும் இதுவரை காலமும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குப்பை சேகரிக்கும் நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், குப்பைகளைச் சேகரிக்கும் நிலையத்தைச் சூழவுள்ள இந்தப் பிரதேசத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதனால் விவசாயிகள் தங்களது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமலுள்ளதாகவும் விவசாயிகளினால் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் கருத்துத் தெரிவிக்கையில், 'இந்த  திண்மக்கழிவு சேகரிப்பு நிலையத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட மின்சாரவேலி கடந்த வருடம் பழுதடைந்துள்ளதைத் தொடர்ந்து சிறிதளவில் காணப்பட்டுவந்த  காட்டு யானைகளின் தொல்லைகள், கடந்த ஒரு மாதமாக அதிகரித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் தெரிவித்துள்ளோம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X