Freelancer / 2024 செப்டெம்பர் 07 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து இன்று தேசிய காங்கிரஸின் உச்சபீட உறுப்பினரும், சம்மாந்துறை தொகுதி இளைஞர் அமைப்பாளருமான ஆகிப் அன்சாரின் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை நகரில் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறைக்கான வட்டார அமைப்பாளர்களான எம்.எச்.எம். அஸ்வர், ஏ.எல். இப்ராலெப்பை, எம்.எம். இஸ்மாயில் ஆகியோரும் கலந்துகொண்டு வாக்கு சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது சம்மாந்துறை சந்தை, நகர வர்த்தக நிலையங்களுக்கு சென்ற முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவினை வழங்குமாறு வர்த்தகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதேவேளை குறித்த நடவடிக்கை நாடளாவியரீதியில் இன்றையதினம் காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. R.


7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026