2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

லொறிக்குள் வளர்ப்பு ஆடுகள்

Freelancer   / 2022 மார்ச் 04 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான் 

உரிய அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக  கொண்டு செல்லப்பட்ட 30க்கும் அதிகமான வளர்ப்பு  ஆடுகளை கல்முனை  பொலிஸார்  மீட்டுள்ளனர்.

அம்பாறை - கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை காவலரணில் குறித்த ஆடுகளை கொண்டு வந்த லொறி உட்பட இருவர் இன்று (4) மதியம்   கைது செய்யப்பட்டனர்.

திருகோணமலை மாவட்டம் தோப்பூர் பகுதியில் இருந்து  அக்கரைப்பற்று நோக்கி கொண்டுவரப்பட்ட   சுமார் 30 க்கும் அதிகமான ஆடுகளே இவ்வாறு  கல்முனை பொலிஸாரினால்    மீட்கப்பட்டது.

இவ்வாறு  சட்டவிரோதமாக வழித்தடை அனுமதிப்பத்திரமின்றி  கால்நடைகளை லொறி ஒன்றில் அடைத்து சென்ற  நிலையில், மீட்கப்பட்ட ஆடுகள்  தொடர்பிலான விசாரணையை  பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்டனர்.

மேலும் குறித்த ஆடுகளை  சட்டவிரோதமாக   கொண்டு சென்ற 47 வயது மற்றும்  59 வயது இரு சந்தேக நபர்களை    கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X