2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வகுப்பறைகளில் அலைபேசி பயன்பாடு வேண்டாம்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 18 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்கள் தங்களின் கடமை வேளையில் வகுப்பறைகளில் அலைபேசிகளில் உரையாடுவதை தவிர்க்குமாறு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஷாம் பணித்துள்ளார்.

இது தொடர்பான அறிவித்தல் சகல பாடசாலை அதிபர்களுக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக இன்று திங்கட்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் தமது கடமை வேளையில் வகுப்பறைகளில் அலைபேசிகளைப் பயன்படுத்துவதினால், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் வெகுவாகப் பாதிக்கப்படுவதாக பெற்றோர்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்தே மேற்கண்டவாறு பணித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X