Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 நவம்பர் 19 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மதுல்லா, பைசல் இஸ்மாயில்
அட்டாளைச்சேனை பிரதேசம் முழுவதுமுள்ள வடிகான்கள் துப்பரவு செய்யப்பட வேண்டியுள்ளதுடன், வடிகான்கள் புதிதாக உருவாக்கப்பட்டு வெள்ள நீர் வழிந்தோடுவதற்கான உடனடி நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் திணைக்களத்தலைவர்களும் மேற்கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல் மொஹம்மட் நஸீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச ஊர்க்கரை வாய்க்காலை அகழ்வது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (18) பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எம்.இர்பான் தலைமையில் இடம்பெற்றபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் பெருமழை பெய்கின்றபோது வெள்ளநீர் வழிந்தோடுவதற்கான இடங்கள் இல்லாமல் வீதிகளிலும் மக்களின் குடியிருப்புக்களிலும் வெள்ளம் தேங்கி நிற்பதால் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனை கவனத்திற்கொண்டு இதற்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பது அதிகாரிகளினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் கடமையாகவுள்ளது. குறித்த வேலைத்திட்டக்களை இன்றிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். என்றார்.
மேலும், இப்பிரதேசத்தில் உள்ள அனைத்து வேலைத்திட்டங்களும் குறிப்பாக நீர்ப்பாசன மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரச்சினைகள் உட்பட வடிகான், நீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். இத்திட்டத்துக்கமைவாக அட்டாளைச்சேனை 09ஆம் பிரிவு முதல் இங்குள்ள ஊர்க்கரை வாய்க்கால்கள் புனரமைக்கப்படும்.
குறித்த வேலைத்திட்டங்கள் யாவும் நடைபெற்றுக்கொண்டிருப்பதுடன், முழு வேலைகளையும் மிக விரைவாக செயற்படுத்துமாறும் அதிகாரிகளை வேண்டிக்கொண்டார்.
அத்துடன், அட்டாளைச்சேனை கோணாவத்தை கொட்டுப்பாலத்தின் நடுப்பகுதியை உடைத்து அதற்கான தற்காலிக பாலம் ஒன்றை எதிர்வரும் புதன்கிழமை நிர்மாணிப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் நீர்ப்பாசணத்திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் இது இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
15 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago