Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார், கனகராசா சரவணன்
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டமடு மேய்ச்சல்தரைப் பகுதியில் அத்துமீறி உட்பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில்; மேலும் 21 பேரை செவ்வாய்க்கிழமை (06) மாலை கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடமிருந்து கவுண்டி ஒன்றையும் கப் ரக வாகனம் ஒன்றையும் 06 உழவு இயந்திரங்களையும் 07 மோட்டார் சைக்கிள்களையும் 02 சைக்கிள்களையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.
வேளாண்மைச் செய்கைக்காக உழவு நடவடிக்கையில் ஈடுபட்ட 17 பேரையும்; கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்ட 04 பேரையுமே கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
இது இவ்வாறிருக்க, மேற்படி பிரதேசத்தில் உட்பிரவேசித்த 11 பேர் கடந்த திங்கட்கிழமை; கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
குறித்த வட்டமடுப் பிரதேசம் நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
18 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
2 hours ago