2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

வட்டமடுவில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டமடுப் பகுதியில் உழவு இயந்திரத்துடன் 36 வயதுடைய ஒருவரை சனிக்கிழமை (10) மாலை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டமடுவில் விவசாய நடவடிக்கைக்கு தடைசெய்யப்பட்ட வயலை உழுதார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இவரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

வட்டமடுப் பிரதேசம் மேய்ச்சல்தரையென பண்ணையாளர்கள் தெரிவிக்கும் அதேவேளை, போகத்துக்கு போகம் விவசாயிகளும் வயல் வேலையில் ஈடுபடுகின்ற நிலையில் இது தொடர்பில் பிரச்சினை நிலவுகின்றது.

இந்தச் சந்தேக நபரை நாளை திங்கட்கிழமை பொத்துவில் மாவட்ட நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X