2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

வயல்வெளியில் இருந்து சடலம் மீட்பு

Janu   / 2026 ஏப்ரல் 01 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் சம்மாந்துறை பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வயல்வெளியொன்றிலிருந்து புதன்கிழமை (01) அன்று மீட்கப்பட்ட சடலம், உயிரிழந்தவரின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சம்மாந்துறை சாலி வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஆதம்பாவா ரியால் என்பவராவார்.

குறித்த பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாகப் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆரம்பத்தில் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் உயிரிழந்தவரின் விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மரணத்திற்கான காரணம் மற்றும் ஏனைய சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பாறுக் ஷிஹான் , நூருல் ஹுதா உமர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .