2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

வர்த்தகர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள்

Princiya Dixci   / 2020 நவம்பர் 30 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு, வி.சுகிர்தகுமார் 

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று பொதுசந்தை கொவிட் 19 தொற்று அதிகாரிப்பை தொடர்ந்து, திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் வர்த்தகர்களுக்கு தொடர்ச்சியாக பிசிஆர் பரிசோதனைகள், இன்று (30) முன்னெடுக்கப்பட்டன.

பிசிஆர் பரிசோதனைகள், திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனைகளுக்கு அமைவாக, திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன், குழுக்களாக பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், திருக்கோவில், தம்பிலுவிலில் பிரதேசத்தில் பிசிஆர் பரிசோதனையின் மூலம் நேற்று (29) வர்த்தகர்  ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை,  ஆலையடிவேம்பு சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் மேலும் 20 பேருக்கு, இன்று (30) பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக, ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X