Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 மே 23 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரைப்பற்று, தொழில்நுட்பக் கல்லூரியில் வருகைதரு விரிவுரையாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனவென, அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் எஸ். தியாகராசா, இன்று (23) தெரிவித்தார்.
அலுமினியம் பொருத்துதலில் தேசிய சான்றிதழ் கற்கைநெறியைப் போதிப்பதற்கு அக்கற்கைநெறியில் தேசிய தொழில் தகைமை மட்டம் நான்கும், ஐந்து வருட கற்பித்தல் அல்லது தொழில்வாண்மை அனுபவம் அவசியமாகும்.
மோட்டார் சைக்கிள் திருத்துநர் கற்கை நெறியைப் போதிப்பதற்கு, அக்கற்கை நெறியில் தேசிய தொழில் தகைமை மட்டம் ஐந்து அல்லது மோட்டார் வாகன திருத்துநர் கற்கைநெறியில் தேசிய தொழில் தகைமை மட்டம் ஐந்தும், ஐந்து வருட கற்பித்தல் அல்லது தொழில்வாண்மை அனுபவம் கொண்டிருத்தல் வேண்டும்.
விவசாய கள உதவியாளர் கற்கைநெறியைப் போதிப்பதற்கு, அக்கற்கை நெறியில் தேசிய தொழில் தகைமை மட்டம் நான்கு அல்லது விவசாயம் தொடர்பாக பல்கலைக்கழகம் அல்லது அரசால் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பெறப்பட்ட பட்டம் அல்லது டிப்ளோமா அத்துடன், ஐந்து வருட கற்பித்தல் அல்லது தொழில்வாண்மை அனுபவம் அவசியமாகும்.
வன் கணினி தொழில்நுட்பக் கற்கைக்கு, தேசிய தொழில் தகைமை மட்டம் ஐந்து அல்லது வன் கணினி தொழில்நுட்பம் தொடர்பாக பல்கலைக்கழகம் அல்லது அரசால் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பெறப்பட்ட பட்டம் அல்லது டிப்ளோமாஅவற்றுடன் ஐந்து வருட கற்பித்தல் அல்லது தொழில்வாண்மை அனுபவம் அவசியமாகும்.
இக்கற்கைநெறிகளைக் கற்பிக்க விரும்பும் வருகைதரு விரிவுரையாளர்கள், அக்கரைப்பற்று தொழில்நுட்பக்கல்லூரியில் உள்ள தொழில் வழிகாட்டல் பிரிவில் விண்ணப்பப் பத்திரத்தைப் பெற்று அனுப்பி வைக்குமாறு, கல்லூரியின் அதிபர் ச.தியாகராசா கேட்டுக்கொண்டுள்ளார்.
11 minute ago
27 minute ago
40 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
27 minute ago
40 minute ago
51 minute ago