Editorial / 2017 செப்டெம்பர் 19 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா, வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று, அம்பாரை பிரதான வீதி 2ம் கட்டையில், நேற்று (18) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் இறக்காமம், 2 சபா நகர், 8ஆம் கட்டை கிராமத்தைச் சேர்ந்த, 46 வயதுடைய அப்துல் மஜீத் அலியார் எனவும், உயிரிழந்தவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அக்கரைப்பற்றிலிருந்து இறக்காமத்தை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் அக்கரைப்பற்றை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்தவர் இறக்காமம் நோக்கிச் சென்றவர் எனவும் பொலிஸார் கூறினர்.
இதேவேளை படுகாயமடைந்தவர் அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026