2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

விரிவுரையாளர்களுக்கு விண்ணப்பம் கோரல்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 நவம்பர் 04 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் தொழிநுட்பக்கல்வி மற்றும் பயிற்சித் திணக்களத்தின் கீழ் இயங்கும் தொழிநுட்பவியல் கல்லூரிகளில் பணியாற்ற பகுதி நேர விரிவுரையாளர்கள், வெளியக விரிவுரையாளர்கள், போதனாசிரியர்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

நாட்டிலுள்ள 39 தொழிநுட்பவியல் கல்லூரிகளில் 2018ஆம் ஆண்டுக்கு மட்டும் பகுதிநேரம் பணியாற்ற இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இவற்றுக்கான விண்ணப்பங்களையும் பாடவிவரங்களையும் தங்களுக்கு அருகாமையிலுள்ள தொழிநுட்பவியல் கல்லூரிப் பணிப்பாளர் அல்லது அதிபர்களிடம் பெற்று, விண்ணப்பிக்குமாறு, தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பீ.என்.கே. மளலசேகர அறிவித்துள்ளார்.

தெரிவாகும் விரிவுரையாளர் ஒருவருக்கு மணித்தியாலயத்துக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கொடுப்பனவு வழங்கப்படும்.

விண்ணப்பங்களை, எதிர்வரும் 24ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கவும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .