2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வில்லுப்பாட்டுப் போட்டியில் இரண்டாமிடம்

எஸ்.கார்த்திகேசு   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வியமைச்சால், கொழும்பு - பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் நடத்தப்பட்ட அகில இலங்கை 2019 தமிழ்மொழித் தினத் தேசிய மட்டப் வில்லுப்பாட்டுப் போட்டியில், அம்பாறை - திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலய மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

அதிபர் ரி.யோகேஸ்வரனின் ஆலோசனைகளுக்கு அமைவாக, தமிழ்ப் பாட ஆசிரியை திருமதி விஸ்வேஸ்வரி தருமரெத்தினம் நெறியாள்கை செய்திருந்ததோடு, இதற்கான கவி வரிகளை வை.தவதாஸ் எழுதியுள்ளார்.

அக்கரைப்பற்றில் ஒகஸ்ட் மாதம் நடைபெற்ற கிழக்கு மாகாண வில்லுப்பாட்டுப் போட்டியில், முதலாம் இடத்தை பெற்றே, தற்போது அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை, இம்மாணவர்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .