Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்
அம்பாறை மாவட்ட உளவள பிரிவின் அனுசரணையுடன், கல்முனை பிரதேச செயலகத்தால் கள உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்ட “தொழில் வாழ்க்கையும் உள மேன்பாடும்” என்ற தலைப்பிலான விழிப்பூட்டல் கருத்தரங்கு, கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று (18) இடம்பெற்றது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள உளவளத்துணை தினத்தை முன்னிட்டு, நடாத்தப்பட்ட இந்நிகழ்வில், கல்முனை பிரதேசத்தில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.எச்.மனாஸ் தலைமையிலும், பிரதேச உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.ஆர். தஹ்லான் இணைப்பிலும் இடம்பெற்ற இக்கருத்தரங்கில், வளவாளர்களாக மாவட்ட உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.ஏ. டீன் மொஹமட், உளவளத்துணை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். ஜரூன் ஷரீப், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலிஹ், சமூக சேவை உத்தியோகத்தர் சி.அன்சார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago