2025 மே 08, வியாழக்கிழமை

’விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு அரசாங்கம் பங்களிக்கவில்லை’

Editorial   / 2019 ஜூலை 26 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

தற்போதைய அரசாங்கம் நாட்டின் தேசிய பொருளாதாரத்துக்கு பெரும் பங்காற்றி வரும் விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு எவ்விதப் பங்களிப்பையும் செய்யவில்லை என்று, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். 

அம்பாறை மாவட்ட பொதுஜன பெரமுன விவசாய சம்மேளனத்தின் அங்குராப்பணம், அம்பாறை நகரமண்டப வாடி வீட்டில் நடைபெற்றது. இதில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், விவசாயத்தைப் பற்றி எந்த விடயமும் தெரியாதவாகளே நாட்டை ஆளுகின்றனர் என்றும் இவர்கள் எவ்வாறு விவசாயிகளின் நலனில் அக்கறையுடன் செயற்படுவார்கள் என்றும் கேள்வி எழுப்பியதுடன், இன்னும் 04 மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலை எதிர்நோக்கவுள்ளதாகவும் அதன் பின்னர் ஆட்சிபீடம் ஏறவுள்ள மஹிந்த அணியினர் விவசாயிகளுக்கு கடந்த காலங்களில் வழங்கிய சலுகைகளைப் போன்று தொடர்ந்தும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பர் என்றும் தெரிவித்தார்.

தேர்தல் ஒன்றை சந்திக்க வேண்டியுள்ளதால், அதனை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறான அமைப்புகளை உருவாக்கி வருவதாகவும் சிங்களப் பிரதேசங்களில் இவ்வாறான அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதென்றும் தற்போது அம்பாறை மாவட்டத்தில், இவ்வாறான விவசாயிகள் சார்பாக அமைப்புகள் உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில், தமிழ் முஸ்லிம் பிரதேசங்களிலும், இவ்வாறான அமைப்புகள் எதிர்காலத்தல் அமைக்கப்படும் எனவும் இந்த அரசாங்கம் வெளிநாட்டுக் கொள்கையுடன் செயற்படுவதால் விவசாயிகளைப் பற்றி யோசிக்கவில்லை என்றும் சாடினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X