2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விவசாயிகளுக்கு உதவ தீர்மானம்

Princiya Dixci   / 2022 மார்ச் 24 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

உரக் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, சேதனப் பசளை உற்பத்தியை அதிகரித்து, விவசாயத்துறைக்கு பங்களிப்புச் செய்வதற்கான விசேட திட்டத்தை நடைமுறைப்படுத்துவதென கல்முனை மாநகர சபை தீர்மானித்துள்ளது.

கல்முனை மாநகர சபையின் 48ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு, மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில், நேற்று (23) பிற்பகல் நடைபெற்றபோதே இவ்விடயம் குறித்து ஆராயப்பட்டு, இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை முன்மொழிந்து கருத்து தெரிவித்த மாநகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் சி.எம்.முபீத், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உரக்கட்டுப்பாட்டு திட்டத்தால் விவசாயத்துறை பாதிக்கப்பட்டுள்ளதாக விசனம் தெரிவித்தார்.

அத்துடன் 40 ஆயிரம் ரூபாய்க்கு கூட உரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதால், எமது மாநகர சபையால் சேகரிக்கப்படுகின்ற உக்கக்கூடிய கழிவுகளைக் கொண்டு, பசளைகளை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு நல்ல விலையில் அவற்றை விற்று, உதவ வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஆமோதித்து கருத்து வெளியிட்ட சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர் அப்துல் அஸீஸ், உரத் தட்டுப்பாடு நிலவி வருகின்ற இன்றைய சூழ்நிலையில் இயற்கை சேதனப் பசளைக்கு நல்ல கிராக்கி இருப்பதாகவும் அவற்றை மிகையாக உற்பத்தி செய்து எமது பகுதியிலேயே சந்தைக்கு விடுவோமாயின், விவசாயிகள் தாமே முன்வந்து, கொள்வனவு செய்வார்கள் என்றார்.

இதனைத் தொடர்ந்து மேற்படி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .