2025 மே 08, வியாழக்கிழமை

’வீடுகளில் தனிமைப்படுத்தல் விதிகளைக் கடைப்பிடிக்கவும்’

Princiya Dixci   / 2020 நவம்பர் 08 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாணத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், உரிய தனிமைப்படுத்தல் விதிகளைக் கடைப்பிடிக்குமாறு, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ. லதாகரன் பணித்தார்.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில், வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டவர்கள் உரிய தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவதாகத் தமக்குத் தகவல் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், தனிமைப்படுத்தலில் உள்ளவர்களை கண்காணிப்பதற்கு சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் ஆகியோர் சிவில் உடையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். 

தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்படும் போது, சமூகத்துக்கு அவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமெனவும், தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் சமூகத்தின் நலன் கருதி, வீட்டை விட்டு வெளியேற வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார். 

தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வெளியில் சென்று வருவதாகவும், வெளி நபர்கள் தனிமைப்படுத்தல் இடங்களுக்குச் செல்வதாகவும், அறியக் கிடைக்கின்றது. இதனை உடனடியாக நிறுத்தி தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X