எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஜனவரி 08 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை சின்னப் பாலமுனை கடற்கரை வீதி காபட் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்டு இடை நடுவில் விடப்பட்டுள்ள வீதி நீண்ட காலமாக புணரமைக்கப்படாமல் மிகவும் சேதமடைந்து காணப்படுவதால், அந்த வீதி வழியாக போக்குவரத்தில் ஈடுபடும் தாம் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருதாக, பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
சின்னப் பாலமுனை கடற்கரையிலிருந்து ஆரம்பித்து, பாலமுனை பிரதான வீதியுடன் இணையும் ஒரு பகுதி மிகவும் சேதமுற்றுக் காணப்படுகின்ற போதும், இந்த வீதியைப் புனரமைப்புச் செய்வதில் உரிய அதிகாரிகள் எவரும் அக்கறை காட்டவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதிகமான கடற்றொழிலாளர்களும் மீன் வியாபாரிகளும் தமது தொழில் நிமித்தம் இந்த வீதியினூடாக தினமும் பயணித்து வருகின்றனர்.
ஒலுவில் மீனவர் துறைமுகத்துக்கு இரு நூறு மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள இந்த வீதியில் பாரிய ஐஸ் தொழிற்சாலையொன்றும் உள்ளது. சின்னப் பாலமுனை கடற்கரை சிறுவர் பூங்காவுக்குச் செல்வதற்கான பிரதான வழியாகவும் இந்தப் பாதையே காணப்படுகிறது. இவ்வாறான வீதியானது, மிக மோசமாகச் சேதமுற்றுள்ளபோதும், அதனை இதுவரை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கண்டும் காணாமல் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது பாலமுனை பிரதேசத்தில் நீர்வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சினால் 7.7 மில்லியன் ரூபாய் செலவில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, இத்திட்டத்தின் கீழ் இவ்வீதியையும் புனரமைக்குமாறு பொதுமக்கள் கேட்டுள்ளனர்.
26 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago