Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மதுல்லா, ஹஸ்பர் ஏ ஹலீம்
வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் பாரபட்சமின்றி வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென தெரிவித்து, அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று காரைதீவு விபுலானந்தர் சதுக்கத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் பல்வேறுபட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும், சுலோகங்களையும் ஏந்தியவாறு கோசமிட்டு தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அம்பாறை மாவட்டம் உட்பட 14 மாவட்டங்களில் இவ்வாறான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நேற்றுக்காலை முதல் மேற்கொண்டுள்ளதாக வெளிவாரியான வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் ஏ.எச்.ஜெஸீர் இதன் போது தெரிவித்தார்.
நாட்டில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுவரும் இச் சந்தர்ப்பத்தில், வெளிவாரியாக பட்டம் பெற்ற மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்ப தானது இவ்வரசாங்கத்தின் பாரிய துரோகமாகவே உள்ளதெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வேலையற்ற பட்டதாரிகள் பல்வேறுபட்ட தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் தலைவர் ஏ.எச். ஜெஸீர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இவ்வாறான குரோத செயற்பாட்டினால் அம்பாறை மாவட்டத்திலேயே அதிகமான வெளிவாரி பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் சுமார் ஆயிரம் வெளிவாரி வேலையற்ற பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை,திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் கிண்ணியா டாக்டர் ஹில்மி நட்பு பூங்காவின் முன்றலில் நேற்று நடைபெற்றது.
நூற்றுக்கும் அதிகமான பட்டதாரிகள் கலந்து கொண்டு தங்களது கோசங்களை எழுப்பியிருந்தார்கள் வெளிவாரி பட்டதாரிகளை புறக்கணிக்காதே, அரச நியமனத்தில் பட்டதாரிகளுக்கு உள்வாரி, வெளிவாரி என பாகுபாடு காட்டாதே உட்பட "பிரிவினையின் வித்தான ஆளும் ஐக்கிய தேசிய கட்சி அரசே வெளிவாரி பட்டதாரிகளூக்கும் நியமனம் வழங்கு " என்ற பிரதான பதாகைகளை அடங்கிய சொற்களை ஏந்தியவாறும் வெளிவாரி பட்டதாரிகள் கவனயீர்ப்பில் ஈடுபட்டார்கள்.
தங்களுக்கான நியமனங்களை விரைவாக வழங்கக் கோரியும் பட்டதாரிகளுக்கு பாகுபாடு காட்டாமல் இந்த ஆளும் அரசாங்கம் நியமனங்களை வழங்க வேண்டும் என கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் கருத்து தெரிவித்தனர்.இதில் ஆண்,பெண் வெளிவாரி பட்டதாரிகள்,உயர் தேசிய டிப்ளோமாதாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது கோசங்களை எழுப்பியிருந்தார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago