Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 நவம்பர் 01 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா,எஸ்.எம்.அறூஸ்
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திராய்க்கேணி பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகாத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஒலுவில் முதலாம் பிரிவைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சரிப்தீன் சபீக் (வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவரது சடலம் கல்முனை அஸ்ரப் ஞாபகாத்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவருடன் பின் இருக்கையில் சென்ற ஒலுவில் முதலாம் பிரிவைச் சேர்ந்த ஆதம்லெப்பை றிபான் (வயது 33) காயங்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அக்கரைப்பற்று- கல்முனை பிரதான வீதியினூடாக சென்று கொண்டிருக்கையில் திiராய்க்கேணி வீதி சந்தியில் மாடு மோட்டார் சைக்கிளுக்கு எதிராக குறுக்காகப் பாய்ந்ததனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .