2025 மே 03, சனிக்கிழமை

வேலை இல்லாப் பட்டதாரிகளுக்கான கூட்டம்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 26 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறையில்; வேலை இல்லாப் பட்டதாரிகளின் தரவுகள் சேகரிப்பு, அவர்கள் எதிர்நோக்கும்  வேலை இல்லாப் பிரச்சினை ஆகியவை  தொடர்பான விசேட கூட்டம், அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயர் பாடசாலையின் கூட்ட மண்டபத்தில்; எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

வேலைக்காக எதிர்பார்த்துள்ள பட்டதாரிகள் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த காலம், அவர்களின் பட்டப்படிப்புத்துறை, ஏனைய கல்வித் தகைமை, தற்போதைய வயது, பால், பிரதேசம் போன்றவை சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படவுள்ளன என அம்பாறை மாவட்ட வேலை இல்லாப் பட்டதாரிகள் சங்கத் தலைவர் அப்துல் ஹமீட் நசுறுதீன் தெரிவித்தார்.

பட்டதாரிகளின் விடயத்தில் ஏனைய மாகாணங்கள் கடைப்பிடிக்கும் நடைமுறையை கிழக்கு மாகாண சபையும் அரசாங்கமும் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்த அவர்,   இவர்களின் வேலை இல்லாப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அழுத்தம் கொடுப்பதற்காக வேலை இல்லாப் பட்டதாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளோம் எனக் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X