Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2017 மார்ச் 06 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியம் 9 அம்சக் கோரிக்கையை முன்வைத்து மாவட்ட செயலகம் முன்பாக இன்று(06) கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனா்.
இப்போராட்டத்தில் சுமார் 500 வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டட்னர்.
கிழக்கு மாகாணத்தில் வேலையற்றிருக்கும் பட்டதாரிகள் அரசியல்வாதிகளினால் பந்தாடப்பட்டு வருகின்ற துயர நிலையை இந்த நல்லாட்சி அரசாங்கம் போக்க வேண்டும்.
குறிப்பாக கிழக்கு மாகாண சபையானது வேலையில்லா பட்டதாரிகள் விடயத்தில் காத்திரமான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.
பட்டதாரிகளின் திறமைகளை போட்டி பரீட்சை மூலம் அறிந்துகொள்ள முடியாது. ஆகையால் பட்டதாரி நியமனங்களை போட்டி பரீட்சையின்றி நேர்முகப் பரீட்சைகள் மூலம் தகுதிகளை கண்டறிந்து நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
பட்டதாரிகள் நியமனங்கள் அவர்கள் பட்டம் பெற்ற ஆண்டின் அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பட்டதாரிகளின் வயதெல்லையை 45ஆக மட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பட்டதாரிகள் நியமனங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகையில் ஏற்கனவே அரச சேவையில் இருப்பவர்கள் விண்ணப்பிக்க அனுமதிக்கக் கூடாது.
கடந்த அரசாங்கத்தினால் வேலையற்ற பட்டதாரிகள் நேர்முகப்பரீட்சைகள் மூலமே அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். அதேபோன்று எஞ்சியுள்ள பட்டதாரிகளையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago