2025 ஜூலை 14, திங்கட்கிழமை

விழிப்புணர்வுக் கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜி.ஏ.கபூர்

பெண்களுக்கு எதிரான  பாலியல் ரீதியான பிரச்சினைகளை அடையாளப்படுத்தல் மற்றும் பாலியலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு துரித நீதியைப் பெற்றுக்கொள்ள அரசிடம் பரிந்துரை செய்தல் சம்பந்தமான முழுநாள் விழிப்புணர்வுக்  கலந்துரையாடல் நேற்று  வியாழக்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

'16 நாள் செயல்வாத வாரம் - 2015 ஐ முன்னிட்டு நாம் மாற்றுவோம்' என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற கலந்துரையாடல், அம்பாறை மாட்டத்திலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்களான அவா மற்றும் விவோ ஆகிய பெண்கள் அமைப்புக்களுடன் இணைந்து கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் யுத்த சூழ்நிலையிலும், யுத்தத்திற்குப் பிந்திய காலப்பகுதியிலும் பெண்கள் மற்றும் சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்ச்சி, தொந்தரவு மற்றும் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களோ, நீதிப் பரிகாரமோ சரியான முறையிலும் நேரத்திற்கும் கிடைக்காமையால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் வலுவிழக்கப்பட்டவர்களாகவும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் வாழ்ந்து வருவதை காணக் கூடியதாகவுள்ளது.

ஆகவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு சமத்துவமான நீதியும் கௌரவமான வாழ்வும் அரச மற்றும் சமூக கட்டமைப்புக்களுடாக வழங்கப்படுவதுடன், ஒவ்வொரு பெண்ணும்  தத்தமது உரிமைகளோடும் சுயகௌரவத்தோடும் இந்நாட்டில் வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனினதும் பொறுப்பாகும் என்பதை உணர்த்துவதற்காகவும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதற்கும் எதிர்காலத்தில் பெண்கள் இவ்வாறு பாதிக்கப்படுவதனை இல்லாமல் செய்வதற்கும்  பெண்கள் உரிமை சார் அமைப்புக்கள் என்ற வகையில் இந்த நாம் மாற்றுவோம் பிரச்சாரம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .