2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'அக்கரைப்பற்றிலுள்ள நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக் காரியாலயம் இடமாற்றப்படாது'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 25 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அக்கரைப்பற்றில் அமைந்துள்ள நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய முகாமையாளர் காரியாலயம் ஒருபோதும் பிரிக்கப்படமாட்டாது என்பதுடன், இடமாற்றப்படமாட்டாது எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் நஸார் ஹாஜி தெரிவித்தார்.

பாலமுனைப் பிரதேசத்தில் நடைபெற்ற  தேசிய மாநாட்டையடுத்து கட்சி எதிர்நோக்கியுள்ள சமகால நிலைமை தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் நடைபெற்றது. இதன்போதே, அவர்  இந்த வாக்குறுதியை வழங்கியதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;, 'நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் காரியாலயம் துண்டாடப்படுவது குறித்து, நான் வெளியிட்ட அறிக்கை பற்றி மு.கா. தலைவருக்கு நான் விளக்கிக் கூறினேன். இதன்போது, இவ்விடயத்தில் கவனம் செலுத்திய அவர், இக்காரியாலயம் துண்டாடப்படுவதிலுள்ள விபரீதங்களை புரிந்து கொண்டதுடன், இந்தக் காரியாலயம் பிரிக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தையும் எமது கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் வழங்கினார்.

இதனையடுத்து அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் காரியாலயம் தொடர்பான விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்குமாறும் தலைவர் கேட்டுக் கொண்டார்.  இது தொடர்பில் மக்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சியடைவதுடன் இக்காரியாலயம் பிரிக்கப்படுவதை, தடைசெய்த தலைமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X