2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

‘அடையாளம் காட்ட உதவுங்கள்’

Niroshini   / 2017 மார்ச் 22 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அட்டாளைச்சேனை  தைக்கா நகர் பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பலியான சுமார் 65 வயது மதிக்கத்தக்க நபரை அடையாளம் காண உதவுமாறு, பொதுமக்களிடம் அக்கரைப்பற்றுப் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அக்கரைப்பற்றிலிருந்து கடந்த திங்கட்கிழமை (20) மாலை, களுவாஞ்சிக்குடி நோக்கிச் சென்ற கன்டர் வாகனம், விதியைக் கடக்க முற்பட்ட நபரொருவரை மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்தவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, அன்றைய தினம் மருத்துவ பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, பின்னர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த அக்கரைப்பற்று பொலிஸார், கன்டரைக் கைப்பற்றியதுடன், கன்டர் சாரதியைக் கைதுசெய்து, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில், நேற்று ஆஜர்படுத்தியபோது நீதவான், அவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள உயிரிழந்தவரின் சடலத்தை அடையாளம் காண்பதற்கு, அவரது உறவினர்களின் உதவியை, பொலிஸார் கோரியுள்ளதால், உரியவர்கள் வந்து அடையாளம் காட்டுமாறும் கேட்கப்படுகின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் 0672277239, 0672277222, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை 0672277213 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெறமுடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .