2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'அரசியல் ரீதியான முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கு அ.இ.ம.காவுடன் இணைந்து செயற்படுகின்றேன்'

Niroshini   / 2016 ஜனவரி 07 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் மறைவுக்குப் பின் எமது பிரதேசத்தில் நிலவுகின்ற சாணக்கியமுள்ள ஊழலற்ற சிறந்த அரசியல் தலைமைத்துவத்தின் வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டும் மக்களின் நலன் கருதி அரசியல் ரீதியான முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து செயற்படுகின்றேன் என அக்கட்சியின் இளைஞர் அமைப்பாளரும் சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளருமான அன்வர். எம். முஸ்தபா இன்று (07) வியாழக்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களிலும் மற்றும் இணையத்தளங்களிலும் நான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒரங்கட்டபட்டுள்ளதாகவும் திணைக்கள தலைமைத்துவ பதவி வழங்கப்படாமையினால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கொண்டதாகவும் சில செய்திகள் வெளிவந்துள்ளன.

கடந்த காலங்களில் எமது அரசியல் தலைமைத்துவங்களின் அசமந்த போக்கினால் நாம் பல துன்பங்களை சந்தித்த போது இவ் அரசியல் தலைமைத்துவங்களுக்கு அழுத்தங்களை கொடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை நான் மேற்கொண்டிருந்தேன்.

சமுகம் சார்பான விடயங்களில் பல ஆண்டுகளாக இணைந்து செயற்பட்டபோது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிசாட் பதியுதீனின் துணிச்சலானதும் சமுகம் சார்ந்ததுமான அரசியல் நடவடிக்கையில் இணைந்து செயற்பட சந்தர்ப்பம் கிடைத்தது.

கடந்த  நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி 1,200 வாக்கு வித்தியாசத்தில் ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை இழந்த போதிலும் எமது கட்சி 3,3000 க்கும் அதிகமான வாக்குகளை பெற கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஒரே ஒருவர் இரவு பகலாக கட்சிக்காக அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் கட்சியின் விஸ்தரிப்பு நடவடிக்கைகளில் செயற்பட்டதை  எமது தலைமைத்துவமோ அல்லது எங்கள் கட்சியின் ஆதரவாளர்களோ என்றும் மறக்கவில்லை.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமைத்துவத்தினால் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என சில வங்குரோத்து அரசியல் செய்கின்ற நாகரிகமற்றவர்களின் செயற்பாடே தவிர, என்னை எங்களது தலைமை ஒரு போதும் ஓரங்கட்டவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X