2025 மே 02, வெள்ளிக்கிழமை

'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' திட்டத்திலிருந்து அந்-நூர் மகா வித்தியாலயம் நீக்கப்பட்டமையைக் க

Suganthini Ratnam   / 2017 மார்ச் 06 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம்.ஹனீபா

அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயமானது 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' எனும் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து அவ்வித்தியாலயத்துக்கு முன்பாக இன்று (6)  பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

கடந்த வருடம் மேற்படி திட்டத்தில் இவ்வித்தியாலயமும் உள்வாங்கப்பட்டு 'ஏ' தரத்துக்கு மாற்றப்பட்டு அதற்கான ஏற்பாடு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டது.

இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்ட ஏனைய பாடசாலைகளில் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படும் போதிலும், இவ்வித்தியாலயத்தில் மாத்திரம் எந்தவித அபிவிருத்தி வேலையும் மேற்கொள்ளப்படவில்லை என  பெற்றோர் தெரிவித்தனர்.

இது தொடர்பில்; அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் முன்னாள்  உறுப்பினர் தமீம் ஆப்தீன் தெரிவித்தபோது, 'இவ்வித்தியாலயத்தை அபிவிருத்தி செய்வதற்குக் கிடைத்த சந்தர்ப்பம் நீக்கப்பட்டு, அரசியல்வாதிகள் சிலரின் ஒத்துழைப்புடன் வேறு பிரதேசத்திலுள்ள பாடசாலைக்கு இத்திட்டத்தை வழங்குவதற்கான முயற்சி எடுக்கப்படுவதாக எமக்கு அறியக் கிடைத்துள்ளது.

சுமார் 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் இவ்வித்தியாலயத்தில்  மேற்கொள்ளப்படவிருந்த அபிவிருத்தி வேலைத்திட்டம், தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதேவேளை, இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட ஏனைய பாடசாலைகளில் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன' என்றார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X