2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'அ.இ.ம.கா.வின் செயலாளர் நானே'

Niroshini   / 2016 ஜனவரி 13 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கட்சியின் செயலாளரை ஓரங்கட்டிவிடுவதற்காக முன்னெடுக்கப்பட்ட  பிரயத்தனங்கள், இறுதியில் முடியாமல் போய்விட்டது. எனவே தற்போதும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளராக நானே செயற்பட்டு வருகின்றேன் என அக்கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் தெரிவித்தார்.

மேலும், ஒரு தனிநபரை திருப்திப்படுத்துவதற்காக கட்சியின் தேசிய கொள்கைப்பரப்புச் செயலாளர் சுபையிரை கட்சியைவிட்டு ஓரங்கட்டியமையானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பாரிய இழப்பாகும் எனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் இன்று (13)ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணம் மட்டுமல்லாது தேசிய ரீதியாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டவராக  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிர் இருந்து வந்தார்.

அப்படியான ஒருவர் எதுவித தவறுகளையும் செய்யாத சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிநபர் ஒருவரை திருப்திப்படுத்துவதற்காகவும் அம்பாறை மாவட்டத்தில் ஒருவருக்கு மாத்திரம் களம் அமைத்துக் கொடுப்பதற்காகவும் கட்சியின் தலைமை துணைபோய் கட்சியின் தேசிய கொள்கைபரப்புச் செயலாளர் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டமை கவலையான விடயமாகும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட துணிவுள்ள ஒரு அரசியல்வாதியின் வெளியேற்றம் கூட தலைமையினால் கடுகளவேனும் கவனத்திற் கொள்ளப்படவில்லை. எனவே, இவ்வாறான சந்தர்ப்பங்களில் தலைமைகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

மேலும், தற்போது இக்கட்சிக்குள்ளும் பல குழப்பங்கள் இருப்பது வேறு விடயம். இக்கட்சி இன்று இந்தளவுக்கு விருட்சமாவதற்கு காரணமாகவிருந்தவன் நானே எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X