Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
ஆசிரியர்கள் புதுப்புது விடயங்களை தேடியறிந்து கொள்வதன் மூலம் வாண்மை விருத்தியினை அடையமுடியும். அப்போதுதான் சவால்களுக்கு முகம்கொடுத்து அனைத்தையும் வெல்லமுடியும் என சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ்.டொக்டர் உமர்மௌலான தெரிவித்தார்
யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையில் சம்மாந்துறை கல்விவலயத்துக்குட்பட்ட நாவிதன்வெளிக்கோட்டத்தில் உள்ள இரு பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்தி தொடர்பான செயலமர்வு இன்று வியாழக்கிழமை வேப்பையடி கலைமகள் வித்தியாலய மண்டபத்தில் அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் இடம்பெற்றது.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
இன்று நவீனயுகம். இதில் புதுப்புது விடயங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றது அந்த விடயங்களை ஆசிரியர்கள் தேடிக்கற்பவர்களாக இருக்கவேண்டும்.
அப்போதுதான் மாணவர்களுக்கு புதிய விடயங்களை அறிய வழிப்படுத்த முடியும்.இதனை விடுத்து ஏனோ தானோ என்று இருப்போமேயானால் நாம் எதிர்பார்த்த இலக்கை அடையமுடியாது.
ஒரு இலக்கை அடைய வேண்டுமானால் திட்டமிட்டடு அந்த இலக்கை அடையும் வரை உன்னிப்பாக செயற்பட வேண்டும். அப்போதுதான் வெற்றியடையலாம்
காலமாற்றம் சமூக மாற்றத்துக்கு ஏற்ப தங்களை வளப்படுத்தி வளமுள்ள சமூகத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு ஆசிரியர்களின் கையிலேயே இருக்கின்றது. அதற்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் நடந்து கொள்ளவேண்டும் என்றார்.
42 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
52 minute ago
1 hours ago