2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'இணைப் பாடவிதானச் செயற்பாடுகளால் சமநிலையான ஆளுமையினைப் பெறமுடியும்'

Niroshini   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

மாணவர்கள் இணைப்பாட விதானச்செயற்பாடுகளான விளையாட்டு நிகழ்வில் பங்குபற்றுகின்ற போதுதான் சமநிலையான ஆளுமையுடையவராகவும் எதிர்காலத்தில் நாட்டின் தலைவர்களாகவும் உருவாகுவதற்கான சந்தர்ப்பமாக அமையும் என நாவிதன்வெளிக கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து தெரிவித்தார்.

சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட நாவிதன்வெளி கோட்டமட்ட விளையாட்டுப்போட்டி இன்று வேப்பையடி மைதானத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்குதொடர்ந்து பேசுகையில்,

ஒருவருக்கு கல்வி கற்பதற்கு விளையாட்டு பிரதானமாகும். அதாவது உடல் ஆரோக்கியம் இருந்தால்தான் கல்விகற்கமுடியும். அதுமட்டுமல்ல விளையாட்டின் மூலம் சமநிலையான ஆளுமையினைப் பெறமுடியும்.

இன்று பலவழிகளாலும் பாதிக்கப்பட்டுள்ள நாவிதன்வெளிப் பிரதேசத்தின் கல்வியை முன்னேற்ற வேண்டும். தமிழ், முஸ்லிம் என்று இல்லாது அதிகமாக நாவிதன்வெளியில் உள்ள தமிழ் மொழி மூலப்பாடசாலைகளின் வளர்ச்சியிலும் தமிழ்ப் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திலும் எமது வலயக்கல்விப் பணிபாளர் பாரிய கரிசனைக் காட்டி வருவது சந்தோசமாக இருக்கின்றது.

இவ்வாறன சூழ்நிலையில் எமது பிள்ளைகளின் கல்வியினை முன்னேற்றுவதில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் முழு மூச்சாகச் செயற்படவேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X