2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

'உணவு பழக்கவழக்கமும் செயற்பாடுகளுமே நீரிழிவு நோய்க்கு காரணம்'

Niroshini   / 2015 நவம்பர் 17 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

மனிதர்களின் சீரான உடல் இயக்கத்துக்கும் சக்திக்கும் குறிப்பிட்டளவு சீனி தேவைப்பாடாக அமைகின்றது. உடல் செயற்பாடுகளின் குறைபாடுகள் காரணமாக இதன் அளவு இரத்தத்தில் விபரீதமான முறையில் அதிகரிக்கும் போதே அது நீரிழிவு நோயாக அமைகின்றது என அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.ஜஃபர் தெரிவித்தார்.

 உலக நீரிழிவு தின விழிப்புணர்வு கூட்டம் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் தொற்றா நோய் சிகிச்சைப் பிரிவின் எற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையில் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எல். நக்பர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அதிகமானவர்களின் உணவுப் பழக்க வழக்கம் மற்றும் நடத்தைகள் காரணமாகவே தொற்றா நோயான இந்த நீரிழிவு நோய் அதிகம் ஏற்படக் காரணமாக உள்ளதென்ற உண்மையயை நாம் மறந்து செயற்படுவது ஆபத்தான விடயமாகும்.

இது ஒரு அனுசேப தொழிற்பாட்டு நோயாகும். உணவு, நடத்தை, உளரீதியான மாற்றங்களே இதனைக் கட்டுப்படுத்தும்.

இதன் ஆரம்ப அறிகுறிகளாக அதிகமான தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக பசி எடுத்தல், சோம்பல்தனம், கண்பார்வை குறைதல், தோல் உலர்தல் என்பன ஏற்பட்டால் உடன் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சென்று  நீரிழிவு நோய்பற்றி அறிந்து கொண்டு வைத்தியன் ஆசோசனையைப் பெற்று நடந்து கொள்ளவது முக்கியமாகும்.

இந்த நோயினை சிறந்த முறையில் கவனிக்காமல் அலட்சியமாக இருந்தால் இருதய நோய், நரம்புத் தொகுதி பாதிக்கப்பட்டு காயங்கள் நீண்டகாலமாக ஆறாது இருத்தல், கால்,கைகள் விறைப்பு ஏற்படல், பக்கவாதம் என பாரிய பிரச்சினைகளுக்கும் முகம் கோடுக்க வேண்டி ஏற்படும்.

மேலும், கண்கள், சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு இயங்காமல் போகும் அபாயமும் உள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .