Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 நவம்பர் 12 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
எதிர்வரும் மாதம் கிழக்கு மாகாண சபையின் வரவு - செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்படுகின்றபோது அதை முழுமையாக எதிர்க்கவுள்ளேன் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அப்துல் றஸாக் (ஜவாத்) தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு, தவிசாளர் சந்திரதாஷ கலபெத்தி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்றது. இதன்போது அங்கு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாண கல்வி செயற்பாடுகள் உள்ளிட்ட ஏனைய அமைச்சின் செயற்பாடுகளில் பாரிய அதிருப்தி மக்கள் மத்தியில் காணப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிப் பல அமர்வின்போது, நான் மட்டுமல்ல கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பலர் பேசி இருந்தனர். இதனை இந்தச் சபையில் தெரிவித்தும், இதுவரை காலமும் குறிப்பிட்டுப் பேசிய எந்த விடயங்களுக்கும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
அத்துடன், கிழக்கு மாகாண சபையில் பேசிவிட்டு செல்வதைத் தவிர வேறு எவ்வித செயற்பாடுகளும் சீராக இடம்பெறுவதாக எனக்குத் தெரியவில்லை என்றும் அடுத்த சபையில் நான் எதிர்க்கட்சிப் பக்கம் மாறிச்சென்று சகல நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளேன் என்று கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 May 2025
17 May 2025