Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
ஐக்கிய நாடுகள் சபையின செயலாளர் நாயகம் பான் கீ மூனை, இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தலைமைகள் தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்யாமை கவலையளிப்பதாக உலமாக் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'இந்த நாட்டில் ஆயுதம் தாங்கிப் போராடாமலே உயிர், உடைமை இழப்புகளுக்கு
முகங்கொடுத்தவர்களாக முஸ்லிம்கள் உள்ளனர். இந்நிலையில், முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களின் தனித்தரப்பொன்றை, ஐ.நா. செயலாளர் நாயகத்துடன்; தனியாகச் சந்திக்கச் செய்வதற்கு இந்த அரசாங்கத்துக்கு முடியாமல் போயுள்ளது. இத்தனைக்கும் இந்த நாட்டு முஸ்லிம்களில் 98 சதவீதமானோர் நல்லாட்சிக்கு வாக்களித்தும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளமை கவலையளிக்கிறது.
எனவே, உடனடியாக இது விடயத்தில் பிரதமர் தலையிட்டு நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் அரசியலில்
செயற்படும் முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த 'அனைத்து முஸ்லிம் கூட்டமைப்பை' ஐ.நா. செயலாளரை தனியாக சந்தித்து முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் வடக்கு, கிழக்கை இணைக்காத அரசியல் தீர்வு குறித்தும் அவரிடம் கூறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பிரதமரிடம் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது' என்றார்.
12 minute ago
23 minute ago
28 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
28 minute ago
29 minute ago