Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.எம்.எம்.ஏ.காதர்
வாசிப்பதன் மூலமே ஒரு மனிதன் முழு மனிதனாக மாறுகிறான். எனவே, ஒவ்வொரு மனிதனும் வாசிப்பவனாக மாறவேண்டும் என துறைநீலாவணை பொது நூலகத்தின் நூலகர் ஜனாபா ஹரீஷா சமீம் தெரிவித்தார்.
தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி நூலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு இன்று(13)நூலக வளாகத்தில் நடைபெற்றது.இங்கு தலைமையுரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில், அதிதிகளாக பிரசித்த நொத்தாரிஸ் சாமித்தம்பி சுந்தரலிங்கம்,ஓய்வு பெற்ற அதிபர் சோமநாதன் மயில்வாகனம்,துறைநீலாவணை சித்திவிநாயகர் வித்தியாலய அதிபர் ஏ.மனோகரன்,ஆசிரிய ஆலோசகர் திருமதி எஸ்.தில்லைநாதன்,ஆசிரியர்களான திருமதி கே.மோட்ச நாதன்,திருமதி ஜா.பரமேஸ்வரன்,பி.இதயகுமார்,நூலக உத்தியோகத்தர்களான கே.கிருபாகரன்,த.சச்சரூபவதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
இப்போது வாசிப்புப் பழக்கம் மிகவும் குறைந்து விட்டது. நூலகத்துக்கு வருபவர்கள் மிகவும் குறைந்து விட்டார்கள். நூலகங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
எனவே, இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் இங்குள்ள மாணவர்களும் இந்த நூலகத்தை பயன்படுத்தி வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்க முன்வர வேண்டும் என்றார்.
38 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
48 minute ago
1 hours ago