2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கத்திக் குத்தில் இளைஞர் காயம்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 14 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை கத்திக் குத்துக்கு உள்ளான முகம்மது ஹசன் (வயது 24) என்ற இளைஞர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று மணிக்கூட்டுக்கோபுரத்துக்கு முன்பாக தற்காலிமாக அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்ரிக் பொருட்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் ஹப்புத்தளையை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த இளைஞர் வேலை செய்துவருகின்றார்.  

இந்நிலையில் அக்கடைக்கு வந்த ஒருவர், கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்ட கத்தியை எடுத்து குறித்த இளைஞர் மீது குத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவரைத் தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .