2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கல்முனையில் உணவகங்கள், ஹோட்டல்களில் சோதனை

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 25 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

கல்முனைப் பிராந்திய சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களிலுள்ள  உணவகங்கள், உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் ஹோட்டல்களில் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஒருவார காலத்துக்கு  சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்முனை  மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் பீ.பேரம்பலம் தெரிவித்தார்.

இதற்கென விசேடமாக பொதுச் சுகாதார பிhசோதகர்கள் குழு நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.  

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைக் கடைப்பிடிக்காமல், உணவகங்களில் நுகர்வோருக்கு பொருத்தம் இல்லாத வகையில் விற்பனைக்காக உணவுகiளை வைத்திருக்கும் உணவக உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டு விற்கப்படும் குளிர்பானங்கள் இலங்கை உணவுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு அமையக் காணப்பட வேண்டும்;.

குளிர்பானங்களில் சீனியின் அளவைக் குறிக்கும் நிறங்கள் தொடர்பிலும் சோதனை  செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X