2025 ஜூலை 02, புதன்கிழமை

'கல்வியும் ஒழுக்கமும் கொண்ட பிள்ளைகளால் சமூகத்துக்கு நன்மை கிட்டும்'

Gavitha   / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா

கல்வியும் ஒழுக்கமும் கொண்ட நற்பிரஜைகளாக பிள்ளைகளை வளர்த்தெடுப்பதன் மூலமே, சமூகத்துக்கும் நாட்டுக்கும் நன்மையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்தார்.

வருமானம் குறைந்த குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களது கல்வி மேம்பாட்டுக்கான உதவி வழங்கும் நிகழ்வு,  வெள்ளிக்கிழமை (23) மாலை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'பாடசாலையிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் தகவல்களின் அடிப்படையில், எமது அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகமான மாணவர்கள் இடைவிலகியதாக கூறப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.

வறுமையைக் காரணம் காட்டி எமது பிள்ளைகளின் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடாது. இதனால் நாம் வாழ்நாள் முழுவதும் கவலைப்பட வேண்டியவர்களாக இருப்பதுடன் நாட்டுக்கும் சமூகத்துக்கும் செய்யும் பாரிய தவறாகவும் அது அமைந்து விடும்' என்று அவர் குறிப்பிட்டார்.

வாழக்கையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு, நமக்குக் கிடைக்கின்றவை சிறு உதவிகளாயினும் அதனைப் பெற்றுக்கொண்டு பிள்ளைகளின் எதிர்காலத்தை சுபீட்சமானதாக அமைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .