2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்'

Niroshini   / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களுக்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

அப்போது தான் அதனை சிறந்த முறையில் நிறைவேற்ற முடியுமென அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.ரஹ்மான் தெரிவித்தார்.

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாற தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை உள்ளூராட்சிமன்ற வாரம் பிரகடனப்பட்டுள்ளது.

முதல் நாளான 7ஆம் திகதி நடமாடும் சேவை தினமாகவும் 08ஆம் திகதி வருமான அபிவிருத்தி தினமாகவும் 09ஆம் திகதி சுகாதார தினமாகவும் 10ஆம் திகதி கல்வி மற்றும் நூலக தினமாகவும் 11ஆம் திகதி சுற்றாடல் தினமாகவும் 12ஆம் திகதி மக்கள் தினமாகவும் இறுதி நாளான 13ஆம் திகதி விளையாட்டு தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வேலைத்திட்டமானது தீகவாபி, அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை மற்றும் திராய்க்கேணி ஆகிய பிரிவுகள் முழுவதிலும் உள்ளுராட்சி வாரம் விரிவுப்படுத்தப்பட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என்றார்.

மேலும்,இவ்வேலைத் திட்டங்களை சிறந்த முறையில் முன்னெடுத்து எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதோடு பிரதேச சபையை ஒரு முன்மாதிரியான நிறுவனமாக மாற்றுவதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X