2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாணத்தில் இலங்கை கல்வி நிர்வாகச் சேவை அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை

Suganthini Ratnam   / 2017 மார்ச் 07 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் இலங்கை கல்வி நிர்வாகச் சேவையைச் சேர்ந்த 172 அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்த இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாணச் சங்கம்,  இங்கிருந்து மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு எவரையும் விடுவிக்கக்கூடாது எனவும் கோரியுள்ளது.

இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு மேற்படி சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.முஹம்மட் முக்தார், இன்று (7) கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,'கிழக்கு மாகாண வலயக் கல்வி அலுவலகங்கள், கோட்டக் கல்வி அலுவலகங்கள் ஆகியவற்றில் பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கு வெற்றிடங்கள் நிலவுகின்றன. இதன் காரணமாகப் பாரிய நிர்வாகச் சிக்கலை கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு எதிர்கொண்டுள்ளது.

மேலும், ஏற்கெனவே காணப்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்காக  இடைக்கால ஏற்பாடாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளை மத்திய கல்வி அமைச்சு அனுப்பி வைத்தது. இந்நிலையில், அரசியல் காரணம் மற்றும் சில அழுத்தங்கள் காரணமாக  மேற்படி  அதிகாரிகளை கிழக்கு மாகாண அரசாங்கச் சேவையிலிருந்து மத்திய அரசாங்கச் சேவைக்கு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு மூலமாக விடுவிப்பதற்கு முயற்சி  மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறான விடுவிப்பு இடம்பெற்றால், எமது சங்கம் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X