Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 17 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
நாடாளுமன்றத்தில் இனவாதக் கருத்துக்களை பரப்புவர்கள் மீது முதலில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் நாடாளுமன்றத்தில் இனவாதக் கருத்துக்களை பேசக்கூடாது என்ற சட்டத்தையும் அமுல்படுத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.
நிந்தவூர், தெற்கு செங்கல் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தினருக்கு செங்கல் உற்பத்திப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை (16) நிந்தவூரில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் வாழும் முஸ்லிம்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்பட்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்பிரச்சினை எதனால் ஏற்படுகின்றது என்பதை முதலில் இனங்காண வேண்டும். அவ்வாறு இனங்காணும்போதுதான் அப்பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுமுள்ளி வைக்கமுடியும்.
இவ்விடயத்தில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச வெறுப்பூட்டக்கூடிய ஒரு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து விட்டு அதனை தற்போது வாபஸ் வாங்கக்கூடிய சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளார் என்றார்.
'நாடாளுமன்றத்தில் இனவாதக் கருத்துக்களை பேசக்கூடாது என்ற சட்டத்தையும் அமுல்படுத்தப்பட வேண்டும்.
இந்த விடயம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் கவனத்துக்கு கொண்டு வரவுள்ளோம்.
அத்துடன் இது தொடர்பில் குழுவொன்றை அமைத்து, அதற்கான அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிக்கும்படி மு.கா தலைமை எங்களிடம் கோரியுள்ளது ' எனவும் அவர் தெரிவித்தார்.
16 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago