Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மே 18 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
இனப்படுகொலை நடந்த மே 18ஆம் திகதி இந்த நாளிலே சர்வதேசம் மௌனமாக இருந்து எந்தவிதமான குரலும் கொடுக்காமல் பார்த்திருந்த இந்த நாளில் அதற்கு பதில் சொல்லவேண்டிய கடமை சர்வதேசத்துக்கு இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்
முள்ளிவாய்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பையிட்டு ஆலையடிவேம்பு வம்மியடி பிள்ளையார் கோவிலில்; விசேட ஆத்மசாந்தி பூஜையும் சுடர் ஏற்றும் நிகழ்வும் நேற்றுச் செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'தமிழ் மக்களுக்கு மறக்கமுடியாத ஒருநாள். இது தமிழ் மக்களுக்கு பெரும் துயரையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த நாளில் உயிர்நீத்த அனைத்து தமிழ் உறவுகளுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்ற இந்த நாளிலே இனப்படுகொலை நடக்கின்றபோது சர்வதேசம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமல்ல எந்தவித குரலும் எழுப்பாது தமிழ் மக்களை அநாதரவாக விடப்பட்ட ஒரு நாளாகும்
எனவே, இப்படிப்பட்ட துன்பகரமான நிகழ்விலே சர்வதேசம் ஏன் கண்மூடித்தனமாக மௌனமாக இருந்தது. இனிமேலாவது அப்படி இருக்காமல் எமது மக்கள் இழந்த இழப்பீடுகளை, உயிரிழப்புகளை மனதில் நிலைநிறுத்தி; எங்கள் தமிழ் மக்களுக்குரிய விடிவை, உரிய நல்லதொரு தீர்வை சர்வதேசம் தரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .