2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

'சில விடயங்களை சாதிக்கமுடியாமலுள்ளோம்'

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

'கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக  இருந்த நிலைமை மாறி ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், சில விடயங்களை நாங்கள் சாதிக்கமுடியாமல் இருந்துகொண்டிருக்கின்றோம்'  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று விவேகானந்த வித்தியாலயத்துக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் சுவிஸ்; நாட்டுக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் நன்கொடையாளர் அருள்நந்தி தவரெத்தினத்துடன் நேற்று புதன்கிழமை திடீர் விஜயம் செய்தார். இதன்போது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  கல்வியில் எங்களுடைய சமூகம் உயர்ந்திருப்பதை அறிவோம். அவ்வாறான சூழலில் இந்த நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழல் எங்களை மிகவும் பின்தள்ளி பாதிக்கப்பட்டவர்களாக ஒரு மனோநிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது. இந்த நிலைமை மாற்றியமைக்க வேண்டும். அதற்கு எங்களுடைய சமூகத்திலே நாங்கள் ஒவ்வொருவரும் பங்குதாரர்களாக இருந்து பல பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக நாங்கள் உருவாகவேண்டும்.

அதேவேளை இன்று நாங்கள் இராஜதந்திர ரீதியாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற  இந்த காலகட்டத்தில் கல்வி ரீதியாக எங்களுடைய சமூகத்தை வளர்த்தெடுத்துக் கொள்ளவேண்டிய கடைப்பாடு உங்களிடம் இருந்து கொண்டிருக்கின்றது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .