2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'திண்மக்கழிவகற்றல் நிலையத்தை சீரமைத்து ஆரம்பிக்கவும்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

அம்பாறை, புத்தங்கல பிரதேசத்தில் கைவிடப்பட்டுள்ள திண்மக்கழிவகற்றல் நிலையத்தை ஒரு வார காலத்தினுள் சீரமைத்து ஆரம்பிக்குமாறு ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சேதனப்பசளை உருவாக்கும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் சில மாதங்களாக கைவிடப்பட்டுள்ளதாகவும் அதனால் மக்கள் அசௌகரியத்துக்குள்ளாவதாகவும் தெரிவித்த மக்களது வேண்டுகோளுக்கமைவாக அங்கு சென்ற அமைச்சர் நிலையத்தை பார்வையிட்டதுடன் உடன் மீள ஆரம்பிப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

அரச சார்பற்ற அமைப்பினால் உருவாக்கப்பட்டு அம்பாறை மாநகர சபையால் பராமரிக்கப்பட்டு வந்த இந்நிலையம் முறையற்ற பராமரிப்பு, யானைகளின் ஊடுருவல் போன்றவற்றால் கைவிடப்பட்டுள்ளதாக பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இவ்வாறான தவறுகள் இடம்பெற இனிமேல் அனுமதியளிக்க முடியாது எனவும் உரிய அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தயா கமகே வலியுறுத்தினார்.

இதேவேளை,  அமைச்சர் காட்டு யானைகள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X