Suganthini Ratnam / 2017 மார்ச் 19 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
தூய அரசியலை வலியுறுத்தி 'மார்ச் 12' என்ற இயக்கத்தின் விழிப்புணர்வுப் பேரணி அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் துஷித்த பி.வணிகசிங்கவின் தலைமையில் நடைபெறவுள்ள இப்பேரணியின் இறுதி நிகழ்வு, கச்சேரி மண்டபத்தில் நடைபெறும் என மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர் வி.பரமசிங்கம் தெரிவித்தார்.
பெரியநீலாணையில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பாகும் பேரணி கல்முனை, காரைதீவு, ஒலுவில், அக்கரைப்பற்று, இறக்காமம் ஆகிய பகுதிகள் ஊடாக அம்பாறை நகரைச் சென்;றடையவுள்ளது எனவும் அவர் கூறினார்.
இப்பேரணி தொடர்பான கலந்துரையாடல், அக்கரைப்பற்றிலுள்ள அரசசார்பற்ற இணையத்தின் தலைமையகத்தில் இன்று (19) நடைபெற்றது.
மேலும், எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பட்டியல் முறை அடிப்படையில் நடைபெறவுள்ளதால், வட்டாரத்துக்காக தெரிவு செய்யப்படும் வேட்பாளருக்கு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதுடன், தகுதியான வேட்பாளர்களை நியமிக்கும் பொறுப்பும் மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இப்பேரணியின்போது வலியுறுத்தப்படவுள்ளது. இதற்கான அனைவரினதும் பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் கேட்டுக்கொண்டார்.
40 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago