Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 நவம்பர் 13 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
தமிழ், முஸ்லிம் மக்களின் பெரும்பான்;மையான ஆதரவுடன் உருவாக்கப்பட்ட இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இன்று சிலர் செம்மறி ஆடு வேடத்தில் ஏகாதிபத்திய குள்ளநரிகள் போன்று செயற்படுகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இதற்கு உதாரணமாக அம்பாறை இறக்காமம் மாணிக்கமடு புத்தர் சிலை வைப்புக்கான அனுமதிப்பைக் கூறலாம். அன்று 'ஸ்ரீ', இன்று புத்தர் சிலை. இது ஆபத்தானது எனவும் அவர் கூறினார்.
இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைப்பு விவகாரம் தொடர்பில் அம்பாறை மாவட்டச் செயலகத்தில் கடந்த திங்கட்கிழமை (07) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போது, அமைச்சர் தயா கமகே தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தபோது,'இந்த நாட்டில் புத்தர் சிலைகள் வைப்பதை யாராலும் தடுக்கமுடியாது. புத்தர் சிலை வைப்பது நல்லாட்சியைப் பாதிக்கும் என்று யாராவது கருதி அதைத் தடுத்தால், தனது அமைச்சுப் பதவியைத் துறப்பதற்கு தயாராகவுள்ளதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்திருந்தார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளமையானது இன ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலாகும்' என்றார்.
' இலங்கையில் பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்தில் தனிச் சிங்கள சட்டத்தை அமுல்படுத்தி 'ஸ்ரீ' என்ற ஒரு எழுத்தின் மூலம் இந்த நாட்டில் தமிழர்களின் வாழ்வைச் சீரழித்து, இந்த நாடும் நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் சொல்லொண்ணாத் துன்பத்தை அனுபவிக்க நேரிட்டது. இன்றுவரை அதன் பாதிப்பு தொடர்கின்றது. அவ்வாறே, இன்று இந்தப் புத்தர் சிலை விவகாரம் தொடருமானால், 'ஸ்ரீ' ஐ விட பாரிய பாதிப்பை எதிர்காலத்தில் ஏற்படுத்தி, மீண்டும் இந்த நாட்டிலுள்ள இனங்களுக்கு இடையிலான மோதலை ஏற்படுத்தும்' எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 May 2025
17 May 2025