2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'நல்லாட்சியில் மக்கள் விரும்பும் விடயங்கள் செய்யப்படுகின்றன'

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 04 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

தற்போதைய நல்லாட்சியில் மக்கள் விரும்பும் விடயங்களைச் செய்வதுடன், மக்களுக்கு நியாயமான முறையில் சகல அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்படுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று சம்சுல் உலும் முன்பள்ளி மாணவர்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் புத்தகப்பைகள் மற்றும் அப்பியாசக்கொப்பிகள் வழங்கும் நடவடிக்கை  அக்கரைப்பற்றில் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்றது, இங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கடந்த காலத்தில் அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் செயற்படுத்தப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வாழ்வாதார விடயங்கள் பொருத்தமான அடிப்படையிலும் பொருமான நபர்களுக்கும் சரியான முறையில் சென்றடையவில்லை. இனிவரும் காலங்களில் இவ்வாறான விடயங்கள் நடைபெறாது. மக்கள் எதை விரும்புகின்றார்களோ அவ்விடயங்கள் செயற்படுத்தப்படும்' என்றார்.

'அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பான வெட்பாளர்களை வெற்றி பெறச் செய்து இச்சபைகளை கைப்பற்றி சிறந்த முறையில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க நாம் எல்லோரும் செயற்பட வேண்டும். அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு கிராமப் பிரிவுகளுக்கும் 15 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள' எனவும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X