2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'நோயற்ற சமூகத்தை உருவாக்குவோம்'

Sudharshini   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்

எமது முன்னோர்களின் வாழ்க்கை வழிமுறைகளையும் உணவுப் பழக்கங்களையும் நாம் கடைப்பிடித்து வருவோமாயின்  ஒரு நோயற்ற சமூகத்தை உருவாக்க முடியும் என அட்டாளைச்சேனை தள ஆயுர்;வேத வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர்; ஜே.யூசுப் தெரிவித்தார்.

'நோயற்ற சமூதாயத்தை உருவாக்குவோம் அதற்கு எல்லோரும் கை கோர்ப்போம்' என்ற தொனிப்பொருளில் அட்டாளைச்சேனையில் இன்று (30) இடம்பெற்ற வைத்திய சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,'இன்றைய சமூதாயத்தினர் தங்களின் உடல் ஆரோக்கியத்தை பார்ப்பதில்லை. அதற்கு மாறாக நாவுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் மிக விரைவாக கிடைக்கக்கூடிய உணவு வகைகளுக்கு பழக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். இதனை மாற்றியமைக்க ஒரு தனி நபரினாலோ அல்லது வைத்திய ஆலோசனைகளின் மூலமாகவோ ஒருபோதும் முடியாது.

எமது முன்னோர்கள் நோய் என்று எந்த வைத்தியசாலைக்குச் சென்றார்கள்? அவர்களுக்கு வைத்திய சிகிச்சையென்றால் என்னவென்றே தெரியாது. அந்தளவுக்கு அவர்களின் உணவுப் பழக்கங்கள் அமைந்திருந்தது. அதனால் நோயற்றவர்களாகவும் உடல் ஆரோக்கியமானவர்களாகவும் வாழ்ந்து வந்தார்கள்.

ஆனால், இன்றைய சமூதாயம் அதற்கு எதிர்மாறாக சுவையான உணவுகளை உண்ணவேண்டும் என்ற நோக்கில் மிக விரைவாக கிடைக்கக்கூடிய உணவுகளை சாப்பிட பழகி விட்டனர். இதனால் வரும் ஆபத்துக்களை அவர்கள் அறிந்தும் அறியாதவர்கள்போல் இருப்பதை என்னவென்று சொல்லமுடியும். நாம் எமது நாவுக்கு அடிமையாகினால் ஒருபோதும் நோயற்றவர்களாக வாழமுடியாது.

இதனை மாற்றியமைக்கவும் ஒரு நோயற்ற சமூதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய  வேண்டும்'; என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X